June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரள அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் 25 மாணவர்களுக்கு வாந்தி- பேதி

1 min read


25 students suffer from vomiting and diarrhea at a Kerala government Ayurvedic hospital.

18.6.2026
கேரளாவில் ஷிகெல்லா தொற்று அதிகரித்து வரும் சூழலில், திரிபுனிதுரா பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, டயோரியா (பேதி) உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். மாணவிகளின் விடுதியில் முதலில் இந்த பாதிப்புகள் தெரிய வந்தன. பின்னர் மாணவர்களின் விடுதியிலும் பாதிப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, விடுதியின் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் இருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்படும். அவற்றை ஆய்வு செய்து, அவர்களுக்கு ஷிகெல்லா தொற்று அல்லது வேறு ஏதேனும் பாக்டீரிய தொற்று ஏற்பட்டிருக்கா? என்பது பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கேரள சுகாதார துறை மந்திரி முரளீதரன் கூறும்போது, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 146 ஷிகெல்லா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 70 பேருக்கு கடந்த ஜூனில் தொற்று உறுதியாகி உள்ளது என கூறினார். இது மொத்த பாதிப்பில் 50 சதவீதம் ஆகும். இதனால், நடப்பு மாதத்தில் இந்த பாதிப்பு மளமளவென அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

கேரளாவில் ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று விரைவாக பரவி வருகிறது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதில், கடந்த ஜனவரியில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீராக பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *