தமிழகத்தில் 11 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டியது
1 min read
Temperatures crossed 100 degrees in 11 places in Tamil Nadu today
24.4.2026
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 11 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104° பாரன்ஹீட் (40.0° செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவான இடங்களின் விவரம் வருமாறு:-
- மதுரை விமான நிலையம் – 104° பாரன்ஹீட் (40.0° செல்சியஸ்)
- வேலூர் – 103.82° பாரன்ஹீட் (39.9° செல்சியஸ்)
- ஈரோடு – 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)
- நாமக்கல் – 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்)
- கரூர் பரமத்தி – 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)
- மதுரை நகரம் – 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்)
- சேலம் – 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)
- சென்னை மீனம்பாக்கம் – 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)
- தர்மபுரி – 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)
- திருச்சி – 100.58° பாரன்ஹீட் (38.1° செல்சியஸ்)
- கோயம்புத்தூர் – 100.04° பாரன்ஹீட் (37.8° செல்சியஸ்)