June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. வெற்றிவாய்ப்பு சூப்பராக உள்ளது? மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

1 min read


DMK Success is super? M. K. Stalin’s faith

25.4.2026
சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்டை விரலை உயர்த்தி காட்டி, சூப்பராக உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின். மதுரை விமான நிலையத்தில் இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓட்டு பதிவிற்கு பின் வழக்கமாக கொடைக்கானல் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்தவகையில், தேர்தல் முடிந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது, சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்டை விரலை உயர்த்தி காட்டி, சூப்பராக உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின். அவர், கார் மூலம் மாலை கொடைக்கானலுக்கு செல்கிறார். இவர் இங்கு பாம்பர்புரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். 2019 லோக்சபா தேர்தலின் போது ஓட்டு பதிவிற்கு பின் கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரம் விடுதியில் குடும்பத்துடன் ஓய்வெடுத்தார். அத்தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2021 தமிழக சட்டசபை தேர்தலின் போது கொடைக்கானலில் தங்கிய நிலையில் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதல்வரானார். 2024 லோக்சபா தேர்தலின் போதும் கொடைக்கானலில் தங்கி இருந்தார். அதிலும் அமோக வெற்றி பெற்றார். தற்போது 2026 சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் தற்போது சென்டிமென்டாக அதே தனியார் விடுதியில் முன் தங்கியிருந்த அறையிலேயே ஓய்வெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *