June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

வாசுதேவநல்லூர்: ஓட்டுப்போட சென்றதொழிலாளி மர்மச்சாவு- மறியல்

1 min read

Vasudevanallur: Worker who went out to drive dies mysteriously – picket

25.4.2026
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர்
பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தேர்தலில் ஓட்டுப்போட சென்ற தொழிலாளி வீடு திரும்பாத நிலையில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா?
மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில்
உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் காவல்துறை பேச்சு வார்த்தை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வாசுதேவநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மாரியப்பன் (வயது 46) கட்டிட தொழிலாளி. இவருக்கு விஜயா என்ற மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி மாரியப்பன், வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டுள்ளார். பின்னர் மாலை வரை அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நெல்கட்டும்செவல் பகுதியில் மாரியப்பன், உடலில் சிராய்ப்பு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுப்போட சென்றவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததால் அவரை யாராவது அடித்து கொன்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உறவினர்கள் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை வாசுதேவநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர் இதனால் 3 நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலை குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்யும் என கூறியதின் அடிப்படையில் அனைவரும் தற்காலிகமாக கலைந்து சென்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *