June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிமுத்தாறு அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலாப்பயணிகள்

1 min read

Tourists flock to bathe at Manimutharu Falls

25.4.2026
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் குளிப்பதற்கு நீர்நிலைகளை தேடி செல்கின்றனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் நிலையில் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

ஆனாலும் கடந்த சில நாட்களாகவே மணிமுத்தாறு அருவியில் பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் நேற்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர் .

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு காரணமாக அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி மற்றும் மணிமுத்தாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . மேலும் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து தாராளமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *