முழுவதும் இந்திக்கு மாறிய இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்
1 min read
India Meteorological Department website completely converted to Hindi
26.4.2027
இந்தியாவின் வானிலை ஆய்வு மையம், தினசரி வானிலை மாற்றங்கள், புயல், கனமழை, வெப்ப அலை மற்றும் பனிப்பொழிவு குறித்த முன்னெச்சரிக்கைகளை வழங்கி வருகிறது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, நாக்பூர், குவஹாத்தி மற்றும் புது டெல்லி ஆகிய 6 இடங்களில் மண்டல வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன.
சென்னை மண்டல மையம் தென் மாநிலங்களுக்கான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி வானிலை மாற்றங்களைக் கண்காணிக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமையகம் புதுடெல்லியில் இயங்கி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளமும் செயல்பட்டு வருகிறது.
இந்த இணையதளம் ஆங்கிலத்தில் இயங்கி வந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதன்மை மொழியாக ஆங்கிலம் இருந்து வந்த நிலையில், இனி இணையதளத்திற்கு உள்ளே சென்ற பிறகே, ஆங்கில மொழியில் மாற்றிக் கொள்ளும்படி அமைத்துள்ளனர்.