June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

மும்பை – புனே விரைவுச்சாலையில் இணைப்பு சாலை 1-ம் தேதி திறக்கப்படும்

1 min read

Link road on Mumbai-Pune Expressway to be opened on 1st

27.4.2026
மும்பை – புனே விரைவுச்சாலையில் போர் மலைப்பாதை பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் அங்கு புதிய இணைப்புச் சாலை போடும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
இந்தநிலையில் இணைப்பு சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்த துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

கொப்போலி முதல் லோனாவாலா அருகேயுள்ள குஸ்காவ் வரை 13.3 கி.மீ. தூரத்திற்கு இந்த ‘மிஸ்சிங் லிங்க்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளைந்து நெளிந்து செல்லும் ஆபத்தான மலைப்பாதையை தவிர்க்க முடியும். இந்த திட்டத்தின் 99 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. மீதமுள்ள சிறிய அளவிலான பணிகள் இன்னும் சில நாட்களில் முடிக்கப்படும்.

சுமார் ரூ.6 ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் மராட்டிய மாநில சாலை மேம்பாட்டு கழகத் தால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2 சுரங்கப்பாதைகள் மற்றும் பிரமாண்ட மான பாலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய சாலையின் மூலம் மும்பை – புனே இடை யிலான பயண தூரம் 6 கி.மீ. குறையும். அதேபோல் பயண நேரத்தில் 20 முதல் 30 நிமிடங் கள் வரை மிச்சமாகும்.
ஆரம்பத்தில் இந்த சாலையில் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் மட்டுமே அனுமதிக் கப்படும். கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதையை பயன்படுத்துவதற்காக கூடுதல் சுங்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள 650 மீட்டர் நீளமுள்ள பாலம், இந்தியாவின் மிக உயர மான ‘கேபிள் ஸ்டேடு’ பாலமாகும். இதன் தூண்கள் 182 மீட்டர் உயரம் கொண்டவை. இது பாந்திரா- ஒர்லி கடல் பாலத்தை விட உயரமானது. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள 23.75 மீட்டர் அகலம் கொண்ட சுரங்கப்பாதை உலகிலேயே அகலமான சாலை சுரங்கப்பா தைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற வாய்ப் புள்ளது.

கடுமையான மழை, பலத்த காற்று மற்றும் அடர்ந்த மூடுபனி போன்ற சவாலான இயற்கை சூழல்களுக்கு இடையே இந்த பொறியியல் அதிசயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லோகார் கோட்டை, விசாபூர் கோட்டை மற்றும் கர்லா குகைகள் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வதும் இனி எளிதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *