ஜனநாயகன் படத்திற்கு எதிர்ப்பு: பாப்பாபட்டி மக்கள் கருப்புக்கொடி போராட்டம்
1 min read
Protest against the film Janyayan: Papapatti villagers hold black flag protest
27.4.2026
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக இருந்தது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக தயாரானார்கள். படத்தின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காத நிலையில், இந்த படம் சொன்ன தேதியில் ரிலீசாகவில்லை. பல்வேறு சிக்கல்களை கடந்து மறு தணிக்கை குழுவினர் கடந்த மாதம், ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்துவிட்ட பிறகும் ரிலீஸ் தேதி பற்றி ஒரு முடிவு தெரியாமல் இருந்துவருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜய்யின் ஜனநாயகன் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதை நீக்க கோரியும் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து படத்தில் தவறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 1996 முதல் 2006 வரை அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.