அத்திரிமலை கோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்- நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
1 min read
Kumbabhishekam at Athiramalai Gorakhnath Temple – Nainar Nagendran participated
30.4.2026
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே அத்ரிமலையில் அமைந்துள்ள கோரக்கநாதர் திருக்கோவில் அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்ரி பரமேஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை அடுத்த சம்பன்குளம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடனாநதி அணைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள அத்ரிமலை அருள்மிகு கோரக்கநாதர் திருக்கோவில் அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்ரி பரமேஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் (இன்று) வியாழக்கிழமை அன்று 9 மணி முதல் 10.30 மணிக்குள் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற இத்திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
மேலும், தமிழ்நாடு ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே. பாண்டியன், சிவசைலம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி சங்கரபாண்டி, சமூகநல ஆர்வலர் சங்கரபாண்டி, கடையம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் வைகுண்டராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் துணை ஆய்வாளர் ராஜதுரை மற்றும் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் பாதைகளை செம்மைப்படுத்தி பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்வது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.
கோவில் செயல் அதிகாரி கேசவராஜன் உள்ளிட்ட இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தர்மபுரம் மடம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் ரூஹான்னா ஜன்னத் மற்றும் சிவசைலம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி சங்கரபாண்டி மற்றும் தர்மபுர மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அனுசியா, ஒன்றிய குழு உறுப்பினர் ஜஹாங்கீர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, முஹம்மது ஷரீப், முகமது மைதீன், சாகுல் ஹமீது, வேலுமயில், பாஸ்கர், சாந்தா, பாத்துமாள் பீவி, மற்றும் ஊராட்சி செயலர் மூக்காண்டி ஆகியோர் செய்திருந்தனர்.