தோரணமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம்- கூட்டு பிரார்த்தனை
1 min read
Chitra Pournami Girivalam at Thoranamalai – Collective Prayer
1.5.2026
தென்காசி மாவட்டம் கணையம் செல்லும் பாதையில் உள்ள
தோரணமலை முருகன் கோவிலில் நேற்று காலை சித்ரா பௌர்ணமியையொட்டி கிரிவலமும், தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி-கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் மாதா மாதம் பௌர்ணமி தோரும் கிரிவலம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) சித்ரா பௌர்ணமி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து முருகனை வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பருவமழை சரியான நேரத்தில் பெய்து விவசாயம் செழித்திடவும் வேண்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்ட கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது
கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காலை, மதியம் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.