June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

1 min read

Police flag parade at the market

3.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் மயிலப்புரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் கடையம் மயிலப்புரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் மேற்பார்வையில் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாத்திமா பர்வீன், கடையம் காவல் நிலைய துணை ஆய்வாளர்கள் மாடசாமி, டேவிட் ஸ்டீபன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *