தூத்துக்குடி -சென்னை இடையே கோடைகால சிறப்பு ரெயில்
1 min read
Summer special train between Thoothukudi and Chennai
3.5.2026
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு நாளை முதல் கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க தூத்துக்குடி தாம்பரம் (வண்டி எண்: 06017) பய ணிகள் எக்ஸ்பிரஸ் பிரதி திங்கள் கிழமைகளில் வரும் 4ம் தேதி துவங்கி ஜூன் 8ம் தேதி வரை இயக் கப்பட உள்ளது.
அதாவது தூத்துக்குடியிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப் படும் ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண் டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல் பட்டு வழியாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மறு நாள் நண்பகல் 12.30 புறப்படுகிறது.
தூத்துக்குடியிலிருந்து சிறப்பு ரயில் புறப்படும் நாட்கள் முறையே 04.05.2026, 11.05.2026, 18.05.26, 25.05.2026, 01.06.2026, 08.06.2026 (திங்கள் கிழமை மட்டும்) ஆகிய தேதிகள் ஆகும். இதே போல தாம்பரம் தூத்துக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண் ரயில் : 06018) வரும் 5ம் தேதி துவங்கி ஒவ்வொரு வாரமும் பிரதி செவ்வாய் கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு சென்னை தாம்ப ரம் ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத் துக்குடி ரயில் நிலையம் வந்தடைகிறது. அதாவது பின்வரும் நாட்களான
05.05.2026, 12.05.2026, 19.05.2026, 26.05.2026, 02. 06.2026, 09.06.2026 (செவ் வாய்க்கிழமை மட்டும்) தேதிகளில் மேற்படி கோடைகால சிறப்பு ரயில் சென்னை தாம்பரத்திலி ருந்துதூத்துக்குடி புறப்படு கின்றது. மேற்கண்ட சிறப்பு ரயிலுக்கான டிக் கெட் முன்பதிவுதற்போது நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு இயக்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்தனர்.