June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சசிகலா கட்சியால் வீழ்ச்சி அடைந்த அ.தி.மு.க., பாஜக தொகுதிகள்

1 min read

AIADMK, BJP seats lost to Sasikala’s party

5.5.2026
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா இந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்டபாளர்களை எதிர்த்து தீவிர பிரசாரத்திலும் சசிகலா ஈடுபட்டார்.
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதுகுளத்தூர் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளர் ராம்குமார் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 222 ஓட்டுகள் பெற்று உள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் 16 ஆயிரத்து 598 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 3 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் பாண்டி மொத்தம் 47 ஆயிரத்து 501 வாக்குகள் பெற்று இருந்தார். இவர் 20 ஆயிரத்து 502 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

இதேபோல் உசிலம்பட்டி தொகுதியிலும் அ.தி.மு.க. வின் வெற்றியை சசிகலாவின் கட்சி தடுத்துள்ளது. இந்த தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளர் அய்யப்பன் மொத்தம் 16 ஆயிரத்து 620 வாக்குகள் பெற்று இருக்கிறார். இந்த தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் விஜய் 1805 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 743 வாக்குள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 63 ஆயிரத்து 938 வாக்குகள் பெற்று இருந்தார். சசிகலா கட்சி பெற்ற ஓட்டுக்களால் அவரது வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றியும் சகிகலா கட்சி பெற்ற ஓட்டுக்களால் தடுக்கப்பட்டு உள்ளது. சகிகலா கட்சியின் சார்பில் போட்டியிட்ட இசக்கிராஜா மொத்தம் 11 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்று உள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கடற்கரைராஜ் 5 ஆயிரத்து 959 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 62 ஆயிரத்து 60 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் மொத்தம் 56 ஆயிரத்து 71 ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதேபோல் சசிகலா கட்சி வேட்டபாளர்கள் சங்கரன்கோவிலில் 8 ஆயிரத்து 6 வாக்குகள், தென்காசி தொகுதி-7715, திருமங்கலம்-2 ஆயிரத்து 851, மேலூர்-2 ஆயிரத்து 628, பரமக்குடி- 2 ஆயிரத்து 239. வாசுதேவநல்லூர்-2 ஆயித்து 249 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *