June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர்கள் அறைகளில் உள்ள படங்கள், பொருட்கள் அகற்றம்

1 min read

Pictures and items removed from ministerial rooms at the Secretariat

5.5.2026
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியான திமுக, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட16 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெக, புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 11 இடங்கள் தேவை எனும் நிலை உள்ளது. இதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், மற்றும் பிற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகளில் உள்ள படங்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களின் அறைகளில் உள்ள கருணநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *