June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

செந்தில் பாலாஜிக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

1 min read

Appeal filed in Supreme Court against CBI probe against Senthil Balaji

7.5.2026
தமிழ்நாட்டில் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் சுமார் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை கேட்டில் அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி, டான் ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக் கானி, டான்ஜெட்கோ கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது.

மேலும் இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத் தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பிலும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், கடந்த 30-ந் தேதி கூறிய தீர்ப்பில், புகார் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, டான்ஜெட்கோ கொள்முதல் பிரிவு நிதி கட் டுப்பாட்டாளர் வி.காசி ஆகியோர் சார்பில் ஐகோர்ட்டின் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *