June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு: சமூக வலைதளத்தில் முகப்பு பக்கத்தை மாற்றிய மோடி

1 min read

Sindhu Operation completes one year: Modi changes home page on social media

7.5.2026
கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி நடவடிக்கையை மே 7ம் தேதி இந்தியா மேற்கொண்டது.

இதில், பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை துல்லியமாக தாக்கி அழித்தது. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இதனை நினைவுகூறும் வகையில் பிரதமர் மோடி தனது சமூக ஊடக பக்கங்களில் உள்ள முகப்பு பக்கத்தை மாற்றி உள்ளார்.

அந்தப் படத்தில் மூவர்ணக் கொடி உள்ளது, மேலும் ‘சிந்தூர் ‘ என்ற வார்த்தையின் ‘ஓ’ எழுத்தில் ஒன்று, திருமணமான இந்துப் பெண்களின் சின்னமான குங்குமத்தால் நிரப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ஓராண்டுக்கு முன்பு, #ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கையின்போது, ​​நமது பாதுகாப்பு படைகள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி, நம் மக்களைத் தாக்கியவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தன. ஒவ்வொரு இந்தியரும் நமது பாதுகாப்பு படைகளைக் குறித்துப் பெருமை கொள்கிறார்கள். நமது படைகளுக்கும், #ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கையின்போது அவர்கள் அடைந்த வெற்றிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, நாம் அனைவரும் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நமது டிஸ்ப்ளே முகப்பு படங்களை, கீழே பகிரப்பட்டுள்ள படத்திற்கு மாற்றுவோம் என அதில் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *