June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலி

1 min read

Farmer dies after being electrocuted while watering

7.5.2026
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள கோடங்கால், காந்தி வீதித் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (50). விவசாயியான இவர், இன்று தனது தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, மின்மோட்டாரில் இருந்து தண்ணீர் வழியாக மின்சாரம் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

தண்ணீர் வழியாகப் பாய்ந்த மின்சாரம் காளிமுத்து மீது தாக்கியதில், அவரது இடுப்பு மற்றும் இரண்டு கால் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உயிரிழந்த காளிமுத்துவுக்குச் சங்கரேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். விவசாயத் தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த காளிமுத்துவின் மறைவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *