June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1 min read

Tenkasi District People’s Grievance Redressal Day Meeting

15.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (15.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங். தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 04 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3.285 /- வீதம் ரூ 13,140/- மதிப்பீட்டிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 565 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர் களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன். தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) பால்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *