June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய் போட்ட முக்கிய 3 கையெழுத்து

1 min read

Vijay’s 3 important signatures

10.5.2026
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா மேடையிலேயே முக்கிய 3 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய் அது குறித்த கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன் படி, 2 மாதங்களில் 500 யூனிட்கள் வரை மின் நுகர்வு செய்வோருக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்.
தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். 3 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த 3 திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், தமிழக அரசு மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள தனிச்செயலாளர்கள் உடனும் விஜய் பேச்சு நடத்தி உள்ளார். அவர் அதிகாரிகளிடம் அரசு நிர்வாகம் குறித்து கேட்டறிந்தார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *