August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பித்தல் சேவைகள்

1 min read

Registration renewal services at Tenkasi Employment Office

15/5/2026
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் செயல்பாடுகளான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு. முகவரி மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பற்றோர் இளைஞர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாகவும். எவ்வித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலே கூறப்பட்டுள்ள அனைத்து சேவைகளும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் பதிவு செய்துகொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

whatsapp, Facebook, youtube, instagram υπό

வலைதளங்களின் போலியான விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வழியாக வழங்கப்படும் சேவைகளில் சந்தேகம் ஏதும் இருப்பின் கதவு எண்:168, SRK பில்டிங், (KFC கடை பின்புறம்) குத்துக்கல் வலசை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 04633-213179 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *