ஹஜ் புனித பயணம்: தென்காசி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம்
1 min read
Hajj pilgrimage: Crowds gather at Tenkasi railway station
15/6/2026
ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித ஹஜ் பயணத்திற்காக, தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் இன்று தென்காசி ரயில்வே சந்திப்பு நிலையத்திற்கு திரண்டனர். இதனால் ரயில்வே நிலையம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழக அரசு சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு முன்பணம் அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், பயணிகள் உற்சாகத்துடன் ரயில்வே நிலையத்துக்கு வந்தனர்.
இங்கிருந்து அவர்கள் பொதிகை எஸ்பிரஸ் ரயில் மூலம் சென்று, நாளை காலை சென்னை அடைய உள்ளனர். அங்கிருந்து இரவு நேரத்தில் ஹஜ் புனித பயணத்திற்காக புறப்பட உள்ளனர்.
புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களை வழியனுப்புவதற்காக அவர்களின் உறவினர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிர்வாகி முகமது அலி தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர்,மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ரயில்வே நிலையத்தில் திரண்டு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதனால் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது..
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ரயில்வே போலீசார் பொதுமக்களை ஒழுங்குபடுத்தினர். இருந்தாலும், யாத்திரிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உறவினர்கள் உணர்ச்சிபூர்வமாக வழியனுப்பி வைத்தனர்