June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்- பவன் கல்யாண் ஆதங்கம்

1 min read

Don’t compare me with Vijay – Pawan Kalyan’s concern

16/5/2026
ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் விஜய் முதல் அமைச்சர் ஆனதில் இருந்து தனக்கு அழுத்தங்கள் அதிகமாக வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக பவன் கல்யாண் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து விஜய் முதல்வர் ஆனதில் இருந்து மக்கள் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். நமது பக்கத்து மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சியை தொடங்கி முதல்வராகிவிட்டார்.
அதே மாதிரி ஆந்திராவில் நான் செய்ய வேண்டும் என்று பலரும் எனக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். பக்கத்து வீட்டுக் கல்யாணத்துக்கு தேவையில்லாத உற்சாகம் காட்டிக்கொண்டு, நம்ம குடும்ப திருமணம் இல்லையென்பதே தெரியாமல் சிறிய குழந்தைகள் ஓடி அலைவதுபோல இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் நிலைமை வேறுபட்டது. அவர்கள் சொல்வது போல, நான் 2019 தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர்கள் கூட என்னுடன் நிற்கவில்லை. அதனால் ஒப்பிட வேண்டாம்”
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *