தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் நிழற்குடை திறப்பு விழா
1 min read
Inauguration ceremony of police shelter at Tenkasi new bus stand
16.5.2026
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கபட்ட நிழற்குடையை தென்காசி மாவட்ட போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கரன திறந்து வைத்தார்.
தென்காசி பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் போக்குவரத்து போலீசார் பணி மற்றும் இடங்களில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமர்ந்து செயல்படும் விதத்திலான நிழற்குடைகள் வேல்ஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார் பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
தென் காசியின் முக்கிய பகுதிகளான ஆசாத் நகர் சந்திப்பு, நீதி மன்ற பகுதி, தங்கபாண்டியன் மருத்துவமனை பகுதி, தபால் நிலையம், கோவில் வாசல், பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம், நடு பல்க் மற்றும் குற்றாலம் அருகே காசி மேஜர்புரம், இலஞ்சி சந்திப்பு, குத்துக்கல் விசை ஆகிய பகுதிகளில் பகல் மற்றும் இரவில் பணி புரியும் காவல் அலுவலர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இந்த இரும்பினால் செய்யப்பட்ட குமார் ரூ. 6.5 லட்சம் மொத்த மதிப்பில் 15 நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கபட்ட நிழற்குடையை தென்காசி மாவட்ட போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கரன திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர்கள் மதியழகன், ஜீலியஸ் சீசர் மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் வீரவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தென்காசி துனை காவல் கண்கானிப்பாளர் அதியமான், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலெட்சுமி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.