குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவர் உள்பட 6 பேர் கைது
1 min read
6 people including Kuthukkalwalasai Panchayat Chairman arrested
16/5/2026
தென்காசி மாவட்டம் நயினாரகரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 2015ம் ஆண்டு குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் தலைவர் சத்யராஜ் என்பவரிடம் சுமார் 7 சென்ட் நிலத்தை குத்தகை அடிப்படையில் வாங்கியுள்ளார்.
அந்நிலத்தில் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்திவந்துள்ளார்.
இதற்காக சரவணன் ரூ. 2.50 லட்சத்தை சத்யராஜிடம் கொடுத்ததாகவும்,மேலும் அங்கு கட்டுமான பணிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சத்யராஜ் இடத்தை காலி செய்ய சரவணனிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சரவணன் தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சத்யராஜிடம்,தான்செல வழித்த ரூ.15 லட்சத்தை தந்தால் இடத்தை தருவதாகவும் சரவணன் கூறி யுள்ளார்.
இந்நிலையில் சத்யராஜ் ஆதரவாளர்கள் சிலர், சரவணனின் ஒர்க் ஷாப்பிற்கு சென்று பொருட்களை சேதப்படுத் தியதாக தெரிகிறது. இது குறித்து அவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் கடந்த 13ம்தேதி சம்பந்தப்பட்டவர்களை இலத்தூர் காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சத்யராஜ், அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் உட லில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து போலீசாரை மிரட்டும் நோக்கில் செயல்பட்ட அவர்களை கைது செய்தனர். மேலும் பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க தூண்டியதாக ஊராட்சி தலைவர் சத்யராஜ், அவரது மனைவி உமா மகேஸ்வரி உள்பட 7 பேர் மீது 7 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்ட நிலையில் மற்ற 6 பேரை தென்காசி நீதிமன் றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளை சிறையில் அடைத்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் சத்யராஜ், அவரது மனைவி மீது காவல்துறையினரை மிரட்டும் விதமாக செயல் பட்டதாக மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.