உபா சட்டத்தின் கீழ், கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம்-சுப்ரீம் கோர்ட்டுஉத்தரவு
1 min read
Bail can be granted to those arrested under the UPFA Act – Supreme Court orders
18.5.2026
ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதில் ஈடுபட்டதாக, தேசிய புலனாய்வு முகமையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, 2020 ஜூன் மாதம் முதல் விசாரணைக்காக சிறையில் இருக்கும் குப்வாராவைச் சேர்ந்த ஒருவர் ஜாமீன் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கூட ஜாமீன் என்பது விதியாகவும், சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டகாலம் சிறையில் அடைபட்டிருப்போருக்கு ஜாமின் மறுக்கக்கூடாது. உபா வழக்குகளில் கைதானவர்களில் வெறும் 6 சதவீதம் மட்டுமே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து மனுதாக்கல் செய்த சையத் இப்திகார் அன்ட்ராபிக்கு ஜாமீன் வழங்கியதுடன், அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.