ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணித்த பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதிப்பு
1 min read
BJP MLA fined for riding bike without helmet
18.5.2026
உத்தரபிரதேச மாநிலம் டியோரியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஷலப் மணி திரிபாதி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது ஆதரவாளர்களுடன் நெடுஞ்சாலையில் புல்லட் பைக்கில் சென்றார். ஷலப் மணி பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
ஹெல்மெட் அணியாமல் சென்ற எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்த எம்.எல்.ஏ. ஷலப் மணி திரிபாதிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.