June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி உபரித்தொகை வழங்க ஆர்பிஐ முடிவு?

1 min read


RBI decides to provide Rs 3 lakh crore surplus to the central government?

19.5.2026
மத்திய அரசுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவிலான உபரித்தொகையை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் மே 22 அன்று மும்பையில் நடைபெறவுள்ள ஆர்பிஐ மத்திய வாரியக் கூட்டத்தில் இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ரூ.2.69 லட்சம் கோடி உபரித்தொகையை மத்திய அரசுக்கு வழங்கியது. இது, முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.2.11 லட்சம் கோடியை விட 27 சதவீதம் அதிகமாகும்.

மேற்காசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்த நிதி அரசுக்கு ஒரு முக்கியப் பாதுகாப்பு அரணாக விளங்கும்.

நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையை பட்ஜெட் இலக்குகளுக்குள் கட்டுப்படுத்த இந்த கூடுதல் வருவாய் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *