June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

முக்கியமான 35 துறைகளை வைத்திருக்கும் கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன்

1 min read


Kerala Chief Minister V.D. Satheesan holds 35 important portfolios

20.5.2026
கேரளாவில் வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார்.
இதனை தொடர்ந்து, காங்., மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், ஏ.பி.அனில்குமார், சன்னி ஜோசப் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், முதல்-மந்திரி வி.டி. சதீசன் நிதி, சட்டம், பொது நிர்வாகம் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட 35 முக்கிய துறைகளை தன் வசம் வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் தனது வலுவான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.
அதே நேரத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு மிக முக்கியத் துறைகளான உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையும், கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் (IUML) தலைவர் பி.கே. குஞ்ஞாலிகுட்டிக்கு தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், முஸ்லிம் லீக் கட்சியின் என். சம்சுதீனுக்கு பொது கல்வித்துறையும், காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப்பிற்கு மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும், கே. முரளீதரனுக்கு சுகாதாரம் மற்றும் தேவஸ்வம் துறையும் பகிர்ந்தளிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ துறைகள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *