மின்சாரத் துறையில் ரூ.2.5 லட்சம் கோடி கடன் – அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
1 min read
Rs 2.5 lakh crore debt in the power sector – Minister Nirmal Kumar informs
20.5.2026
மின்சாரத்துறை ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது;-
இதுவரைக்கும் இருந்த பழைய திமுக அரசில் பல இடங்களில் முறைகேடுகள், விதி மீறல்கள் நடந்திருக்கிறது. அதில் நிறைய வழக்குகள் இன்னைக்கு சிபிஐக்கு எல்லாம் ஹேண்ட் ஓவர் பண்ணப்பட்டிருக்கு. அது மாதிரியான தவறுகளை கண்டிப்பாக நாம நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.
பொதுமக்கள் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு மின்சார வாரியத்தை நாம எல்லாம் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.
மின்சார வாரியத்துக்கு 2 லட்சம் கோடி கடன் இருக்கு, இந்த மின்சார வாரியத்தை முழுமையாக சீரமைத்து, முற்றிலும் லாபகரமான ஒரு நிறுவனமாக மாற்றி, மக்கள் பயனடையும் வழியில் மாற்றக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கு.
ஏனென்றால், இதற்கு முன்னாடி நிர்வாகம் செய்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளால்தான் இத்தனை வருஷமாக இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வந்துட்டு இருக்கு.
மீண்டும் இதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் முயற்சிகளை நாங்கள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.