June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

புதுச்சேரியில் விஜய்யை கடவுள் எனக்கூறி பதவியேற்ற தவெக எம்எல்ஏ; சபாநாயகர் கண்டிப்பு

1 min read

Thaveka MLA takes oath in Puducherry by calling Vijay a god; Speaker reprimands him

20.5.2026
புதுச்சேரியில் விஜய் படத்தை காண்பித்து பதவியேற்ற தவெக எம்எல்ஏவை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கண்டித்துள்ளார்.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. என்ஆர் காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜ 4 தொகுதிகளிலும், அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
கடந்த 13ம் தேதி புதுச்சேரியின் முதல்வராக ரங்கசாமி 5வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, தற்காலிக சபாநாயகராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டு, எம்எல்ஏக்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. 28 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அதில், தவெக எம்எல்ஏ ராமு விஜய் படத்தை காண்பித்து, கடவுள் மீது ஆணையாக என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். இதனை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உடனடியாக கண்டித்தார். அப்போது, தவெக எம்எல்ஏ புதிதாக ஒரு கார்டு காட்டியதை யாரும் ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு கேட்டுக் கொண்டார். மேலும், அந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கவும் ஆணையிட்ட அவர், ‘ஏற்கனவே 1008 கடவுள் இருக்கும் போது, தற்போது 1009 கடவுளாகி விட்டது, போதும்,’ என்றார்.

தொடர்ந்து, தவெக கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்தின் எம்எல்ஏ நேரு பதவியேற்கும் போது, ‘லஞ்சம் வாங்க மாட்டேன். லஞ்சம், ஊழலுக்கு வாங்க துணைபோகவும் மாட்டேன்,’ என்று கூறினார். இதனைக் கண்டித்த சபாநாயகர் அன்பழகன், ‘சம்பந்தம் இல்லாதது எல்லாம் பேசக் கூடாது. உறுதிமொழி பத்திரத்தில் இல்லாததை அவர் பேசியதால், அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடுகிறேன். ஒரு எம்எல்ஏ எப்படி பதவியேற்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தான் நடக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் லஞ்சம் வாங்க ரெடியாக இருக்கும் மாதிரியும், நீங்க மட்டும் தான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று சொல்வது போல இருக்கிறது,’ என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *