October 17, 2026

Seithi Saral

Tamil News Channel

75 வயது முதியவருக்கும் 30 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம்

1 min read

Marriage arranged between a 75-year-old man and a 30-year-old woman

16.10.2026
உத்தரப் பிரதேசத்தில் 75 வயது முதியவரும், 30 வயது இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவர்களது வயது வித்தியாசம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சுகர் (76). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராணி ராஜ்புத் (30). இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட ராணி, ராம்சுகரின் மகளைச் சந்திப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது ராம்சுகருக்கும் ராணிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நட்பாகப் பழகத் தொடங்கியுள்ளனர்.

நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. தங்களுக்குள் சுமார் 45 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தச் சடங்கை நடத்தினர்.

75 வயது முதியவரும், 30 வயது இளம்பெண்ணும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வயது வித்தியாசத்தைக் கடந்து காதல் மலர முடியுமா என்பது குறித்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *