June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 80 பேர் பலி

1 min read

80 killed in coal mine explosion in China

23.5.2026
சீனாவின் வடக்கு மாகாணமான ஷான்சியில் சாங்ஜி நிலக்கரிச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சுரங்கத்தில் 200க்கும் அதிகமானோர் பணிசெய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தால் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி 80க்கும் அதிகமானோர் பலியானார்கள். மேலும் பலரை காணவில்லை. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணத்தை அறிந்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *