June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

1 min read

Sankarankovil: Man who raped girl gets 10 years in prison

26.5.206

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூரில் ஆடு மேய்க்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது தந்தை கோவை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தாய் பெருங்கோட்டூரில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் கடந்த 29.04.2018 அன்று பெருங்கோட்டூர் அருகே உள்ள பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த பெருங்கோட்டூர் காலணி பகுதியைச் சார்ந்த சண்முகையா என்பவரது மகன் முருகன் (வயது 62) என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது பற்றி சிறுமியின் தாயார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விசாரணை அதிகாரி வேளாங்கண்ணி உதயரேகா புலன் விசாரணை நடத்தியதை தொடர்ந்து போலீசார் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ராஜவேல் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி முருகனுக்கு நீதிபதி பி.ராஜவேல்
10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *