August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலம் கார் பார்க்கிங் ஏலம் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம்நடைபெற்றது

1 min read

Old Courtallam car parking auction held by Ayyappari Panchayat

26.5.2026
தென்காசி மாவட்டம், ஆயிரப் பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் கார் பார்க்கிங் ஏலம் நேற்று ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலையாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் செல்வக்குமார் என்பவர் ஏலம் மற்றும் டெண்டர் மூலம் அதிகபட்ச தொகையான ரூபாய் 31,13,550 க்கு கேட்டதால் அவருக்கு ஏலம் விடப்பட்டது.

தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் வாகன நிறுத்த கட்டண வசூல் உரிமம் மற்றும் சாலையோரக் குத்தகை ஏலம் 2026-2027ம் ஆண்டிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ‌கே.கமல்கிஷோர் உத்தரவுபடி 26.05.2026 அன்று காலை 11.30 மணியளவில் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து ஏலம் நடைபெற்றது.

மேற்படி ஏலத்திற்கு ஆயிரப் பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலையாண்டி தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட தென்காசி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சி தணிக்கை) தெற்குபகுதி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஏலம் விடும் நிகழ்ச்சியில் ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.ரேகா, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ்.பட்டமுத்து, எஸ்.முத்து லெட்சுமி, எம்.இசக்கிபாண்டி, கே.முருகசெல்வி, எஸ்.முகமது இப்ராஹிம், ஆகியோர்
கலந்து கொண்டனர்.

ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் பலர் முன்வைப்பு தொகையான ரூபாய் 10 லட்சம் டிடி செலுத்தியவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டனர்.

அதன்படி பழைய குற்றால வாகன நுழைவு கட்டண வசூல் உரிமம் – ஆரம்ப ஏலத்தொகை ரூ.31,13,550-என்று அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ரூபாய் பத்து லட்சத்திற்கான டிடி கட்டியவர்கள் ஏலம் கேட்டனர். அதில் அதிகபட்ச தொகையாக ரூபாய் 31,90,000 என்று ஏலம் மற்றும் டெண்டர் மூலம் கேட்ட சு.செல்வக்குமார் என்பவருக்கு ஏலம் விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏலத்தொகை 31,90,000 மற்றும் முன்வைப்புத் தொகை 5% மற்றும் 18 % ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 39,23,700 அவரிடம் வசூலிக்கப்பட்டு ஊராட்சி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாலையோரக் குத்தகை ஏலம் விடப்பட்டது இதில் முன்பணமாக ரூபாய் 10,000 வீதம் 18 நபர்கள் கட்டியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து சாலை ஒரக்குத்தகை ஏலம் நடைபெற்றது. ஊராட்சி மூலம் ஆரம்ப கட்ட தொகையாக ரூபாய் 40,700 என்று ஏலம் விடப்பட்டது.

இதில் அதிகபட்ச தொகையான ரூ. 60.300 க்கு சா. கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏலம் கேட்டதால் அவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஏலத்தொகை ரூபாய் 60.300 மற்றும் 5% முன்வைப்புத் தொகை மற்றும் 18% ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 74,169 வசூலித்து உடனடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

பழைய குற்றாலம் கார் பார்க்கிங் ஏலம் சுமூகமாக நடைபெறும் வகையில் குற்றாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.முடிவில் ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *