June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு

1 min read


3 days of menstrual leave for school girls in Kerala

29.5.2026
கேரளம் மாநிலத்தின் 16-வது சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. கேரள முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவியேற்றார். அவர் மற்றும் மந்திரிகள் கடந்த 18-ந்தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில் கேரளா சட்டமன்ற கூட்டம் இன்று நடந்தது. வந்தே மாதரம் பாடலுடன் சட்டமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. அதன்பிறகு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கொள்கை உரையாற்றினார். கவர்னரின் கொள்கை உரைக்கு முன்பு வந்தே மாதரம் பாடலின் முதல் பகுதியை காவல்துறை இசைக்குழு இசைத்தது. ஆனால் அந்த பாடல் முழுவதுமாக இசைக்கப்படவில்லை.
இதையடுத்து கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கொள்கை உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்றிருந்த அம்சங்கள் வருமாறு:-

மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பு 3 நாட்கள் வரை இருக்கும். மாதவிடாய் விடுப்புக்கு பதிலாக மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு கட்டாயமாக்கப்படும். நிலப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தனி ஆணையம் அமைக்கப்படும். நில உரிமை பத்திர வினியோகம் மேலும் திறமையானதாக மாற்றப்ப டும். நான்கு வழிச்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். உள்நாட்டு மீன் பிடித்தல் ஊக்குவிக்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறையின் பெயர் எதிர்கால தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும்.

மலிவு விலையில் சிகிக்சையை உறுதி செய்வதே அரசின் நோக்கம். இதனால் சுகாதார துறை மேம்படுத்தப்பட்டு நவீன அமைப்பு உறுதி செய்யப்படும். போதை பொருள் இல்லா கேரளாவிற்கான சிறப்பு திட்டம் போதை பொருள் மாபியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் வக்பு வாரியம் சீரமைக்கப்பட உள்ளது.

மேற்கண்டவை உள்பட பல புதிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெற்றிருந்தன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *