கோவில்பட்டியில் புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது
1 min read
Man arrested for possessing tobacco packets in Kovilpatti
31.5.2026
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி – மந்தித்தோப்பு ரோடு பகுதியில் உள்ள ஒரு மண்டபம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது 38) என்பதும், அவர் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருப்பதும் தெரியவந்தது.
உடனே மேற்சொன்ன போலீசார் சின்னதம்பியை கைது செய்து அவரிடமிருந்த 204 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.