முப்படை, கடற்படை புதிய தலைமை தளபதிகள் இன்று பொறுப்பேற்பு
1 min read
New Chiefs of Staff of the Tri-Services and Navy to assume office today
31.5.2026
நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி இன்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன் அந்த பதவியை வகித்த அனில் சவுகான் தன்னுடைய பதவி காலம் நிறைவடைந்ததும், நேற்று ஓய்வு பெற்றார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்த ராஜா சுப்பிரமணி, கடந்த ஆண்டு ஜூலை 31-ந்தேதி துணை தலைமை தளபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இதனை முன்னிட்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பிறகு, போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று, கடற்படையின் புதிய தலைமை தளபதியாக கிருஷ்ண சுவாமிநாதன் இன்று பொறுப்பேற்று கொண்டார். அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவர் இந்த பதவியை ஏற்று கொண்டார்.
வருங்கால போர்களானது, விண்வெளி, சைபர் தாக்குதல்கள் மற்றும் அறிவுசார் தாக்குதல்கள் தொடர்பாக இருக்க கூடிய நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில், படைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூழலில், அவருடைய பதவியேற்பு முக்கியத்துவம் பெறுகிறது.