June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

திருமண நிகழ்ச்சியில் சீர் எடுத்துச் சென்ற அமைச்சர் கீர்த்தனா

1 min read
Seithi Saral featured Image

Minister Keerthana performed at the wedding ceremony

31.5.2026
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை உழவர் சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்றார்.
அப்போது அமைச்சர் கீர்த்தனா தனது உறவினர்கள் மேளதாளத்துடன் சீர் சுமந்து வந்த பொழுது அமைச்சரும் இணைந்து சீர் சுமந்து ஊர்வலமாக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.

திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சகோதரியின் மகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார்.

இல்ல விழாவில் பங்கேற்று விட்டு புறப்பட்ட அமைச்சர் கீர்த்தனாவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, சந்திப்பை தவிர்த்து விட்டு வேகமாக சென்று விட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *