குஜராத்: பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலி
1 min read
Gujarat: 7 killed in head-on collision between buses
2.6.2026
குஜராத் மாநிலம் சூரத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். குஜராத் – மராட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துகுள்ளானது.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பர்தோலி சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா? அல்லது டிரவரின் கவனக்குறைவாக பேருந்து இயக்கியதால் இந்த விபத்து நேரிட்டதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துகுள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.