தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக ரஞ்சித்சிங் நியமனம்
1 min read
Ranjit Singh appointed as Tenkasi District Magistrate
2.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக ரஞ்சித் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி தென்காசி மாவட்ட முதல் ஆட்சித் தலைவராக ஜி. கே.அருண் சுந்தர் தயாளன் 22.11.2019 முதல் 15.11 2020 வரை பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து டாக்டர் ஜி.எஸ்.சமீரன் 15.11.2020 முதல் 15.06.2021 வரை, அதனைத் தொடர்ந்து எஸ்.கோபால சுந்தர்ராஜ் 17.06.2021 முதல் 17.06.2022 வரை, அதனைத் தொடர்ந்து பி.ஆகாஷ் 06.02.2023 வரை பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து துரை ரவிச்சந்திரன் 06.02 2023 முதல் 28.01.2024 வரை பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து 28.01.2024 முதல் 31.05.2026 வரை ஏ.கே.கமல்கிஷோர் பணியாற்றினார்.
இந்நிலையில்நேற்று தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக ரஞ்சித்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேனி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளார்.