இந்தோனேஷியாவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் சாலைப்புதூர் வாலிபர் தங்கப்பதக்கம்
1 min read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 204.86137;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 42;zeissColor: bright;
Salaiputhur youth wins gold medal in skating competition in Indonesia
4.6.2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது தந்தை முத்துராஜ். கூலி தொழிலாளி. தாயார் சண்முகதாய் பீடி சுற்றும் தொழிலாளி;. சட்டக்கல்லூரி மாணவரான சந்தோஷ் இந்தோனேசியாவில் நடைபெற்ற இன்டர்நேஷனல் அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தங்கப்பதக்கம் பெற்று ஊர் திரும்பிய சந்தோசுக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவருக்கு இனிப்புகள் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் சந்தோஷ் கூறியதாவது:-
எனக்கு சிறுவயதில் இருந்து ஸ்கேட்டிங்கில் ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும் சமயத்தில் தெருக்களிலும், தார் சாலையிலும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன். முதலில் தென்காசி மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற நான், மாநில அளவில் மதுரையிலும், தேசிய அளவில் கோவையிலும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வென்றேன்.
இதைத்தொடர்ந்து இந்தோனேசியால் நடைபெற்ற இண்டர்நேஷனல் அளவிலான போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று விளையாடினேன். இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டதால் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. இதில் 300 மீட்டர்போட்டியில் 4வது இடமும், 1000 மீட்டர் போட்டியில் 8 வது இடமும் பெற்றேன். இறுதியில் நடைபெற்ற 400 மீட்டர் போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று நம் மாவட்டதிற்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்ந்துள்ளேன்.
இப்போட்டியில் இந்திய அணி சார்பில் 70 பேர் கலந்து கொண்டதில் தமிழக வீரர்கள் 58 பேர் ஆவர். இதில் என்னை போன்று கிராமப்புற வீரர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் முறையான ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் இல்லாததால் சாலையில் பயிற்சி பெற்று வருகின்றனர். எனவே அரசு சார்பில் தென்காசி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ள மைதானம் அமைத்து தந்தால் என்னை போன்று கிராமப்புற மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.