June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

1 min read

Worker dies after being electrocuted near Alankulam

7.6.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கரும்பனூரில் வீட்டில் வெள்ளை அடித்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆலங்குளம் அருகே கரும்பனூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை என்பவரது மகன் அருண்(வயது 45) தொழிலாளியான இவர் வீட்டில் சுண்ணாம்பு அடிக்கும் வேலை நடைபெற்றுள்ளது. சக தொழிலாளிகளுடன் அருணும் வேலையில் ஈடுபட்டுள்ளார். உயரமான பகுதியில் உயரமான இடத்தில் வெள்ளை அடித்து கொண்டிருந்த போது, மின் வயரில் சுண்ணாம்பு அடிக்கும் பிரஷ் பட்டதில் மின்சாரம் பாய்ந்து அருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் பலியான அருணுக்கு மனைவி, மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *