கடையத்தில் போதையில் தகராறு இளைஞருக்கு பாட்டில் குத்து
1 min read
A drunken argument at a shop resulted in a youth being hit with a bottle.
7.6.2026
தென்காசி மாவட்டம், கடையத்தில் மதுக் குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை பாட்டிலை உடைத்து குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையம் பாரதிநகரை சேர்ந்தவர் ரகுநாத் (வயது 25). இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மிதுன் (வயது 22) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் மிதுன் ரகுநாத்தை பாட்டிலை உடைத்து நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான காவலர்கள் காயமடைந்த ரகுநாத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து ரகுநாத்தை பாட்டிலால் குத்திய மிதுனை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.