June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: காதலை கைவிட மறுத்த சகோதரியை வெட்டிக்கொன்ற உணவக ஊழியர்

1 min read

Nellai: Restaurant worker hacks sister to death for refusing to give up her relationship

9/6/2026
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராமலெட்சுமி (வயது 23) திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ராமலெட்சுமியின் தம்பி முத்து கிருஷ்ணன் ஒரு தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்த ராம லெட்சுமி தனது காதலனுடன் போனில் பேசி கொண்டிருந்ததை பார்த்த முத்து கிருஷ்ணன் ராம லெட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சண்டை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தம்பி முத்து கிருஷ்ணன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ராமலெட்சுமியை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த ராமலெட்சுமியை அவரது பெற்றோர் உடனடியாக மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே ராமலெட்சுமி பரிதாபமாக உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராமலெட்சுமியின் தாய் அளித்த புகாரின் பெயரில் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து கிருஷ்ணனை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் சொந்த தம்பியே அக்காவை வெட்டி கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *