தென்காசியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
1 min read
Anti-Child Labour Day in Tenkasi
13.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ந
தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங். ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்ததாவது:-
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டு தோறும் ஜீன் 12 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்குட்பட்ட எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த கூடாது. மேலும், 15 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை ஊக்குவித்து குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். ஆகவே, தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து. குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து வாகனங்களில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை ஒட்டினார்.
இந்நிகழ்வில், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.