June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகிரியில் கண்டெனர் லாரி மூலம் புகையிலை பொருட்கள் கடத்தல்

1 min read

Smuggling of tobacco products via container lorry in Sivagiri

13.6.2026
தென்காசி எஸ்பி அசோக் குமார் உத்தரவின் பேரில், புளியங்குடி டிஎஸ்பி மதன்,ஆய்வாளர் ஷ்யாம்சுந்தர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்
சிவகிரி சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் சோலையப்பன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து அவர்கள் சோதனையிட்டனர்.

சோதனையில் லாரியில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் லாரி ஓட்டுநரான மதுரை, செல்லூர், சுயராஜியாபுரம் 2ஆவது பிரதானச்சாலையைச் சேர்ந்த ஜெயகணேஷ்(வயது 48) மற்றும் மாற்று ஓட்டுநரான கிருஷ்ணாபுரம், ரயில்வே பீடர் சாலையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மது பாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து சிவகிரி போலீஸார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்த போலீசார் அந்த கண்டைனர் லாரி அதிலிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.சிவகிரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும், லாரி,புகையிலைப்பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *