தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் கோவில்பட்டி வருகை
1 min read
Chief Postmaster General of Tamil Nadu visits Kovilpatti.
24.6.2026
தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் 24.06.2026 அன்று கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தின் தலைமையிடமான கோவில்பட்டிக்கு வருகை தந்தார்.
கோவில்பட்டியில் வைத்து நடந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் அலுவலர்களிடம் அஞ்சல் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பற்றியும், பொதுமக்களுக்கு அஞ்சல் சேவையை இன்னும் சிறப்பாக வழங்குவது பற்றியும் கலந்துரையாடினார்.
மேலும், வாடிக்கையாளர் சேவையில் ஒவ்வொரு அஞ்சல் அலுவலரின் பங்கு மற்றும் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தின் பல்வேறு சாதனைகள் பற்றி எடுத்துரைத்து, அதற்கான தனது வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்தார்.
சிறப்பாக சேவை செய்த அலுவலகர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் அவர்கள், தங்களை நேரடியாக வந்து சந்தித்து , தங்கள் பகுதி அஞ்சல் துறை சேவைகள் மற்றும் செயல்பாடு குறித்து கேட்டறிந்தது, தங்களுக்கு மகிழ்ச்சியையும், சேவையை இன்னும் திறம்பட செய்வதற்கான புது உத்வேகத்தையும் தந்ததாக கிராமிய அஞ்சல் அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அஞ்சல் துறை தெற்கு மண்டல தலைவர் திரு செய்யது ரஷீத், கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், அஞ்சலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.