நெல்லை: கடனை செலுத்த முன் வந்தும் நகையை ஏலம் விட்ட வங்கிக்கு அபராதம்
1 min read
Nellai: Bank fined for auctioning jewelry despite offer to repay loan.
25/6/2026
திருநெல்வேலியில் தங்கநகை கடனை செலுத்த பணத்துடன் வந்தும் 19 பவுன் நகையை ஏலம் விட்ட வங்கிக்கு நுகர்வோர் ஆணையம் ரூ.2.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
நெல்லை டவுண் தமிழ்ச் சங்கம் தெருவைச் சேர்ந்தவர் தாமோத ரன் (வயது 76). இவர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 7ம்தேதி நெல்லை டவுணில் தேசியமயமாக்கப் பட்ட வங்கி கிளையில் தனது மனைவியின் 19 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.5 லட் சம் கடன் பெற்றார்.
பின்னர் அந்தக் கடனுக்கான அசல் மற்றும் வட்டியாக ரூ.5 லட் சத்து 96 ஆயிரத்து 292 தொகையைச் செலுத்தி நகையை மீட்பதற்காக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வங்கிக்கு நேரில் சென்றார். ஆனால், வங்கி நிர்வாகம் அந்தப் பணத்தை வாங்க மறுத்ததோடு, நகையையும் திருப்பித் தர முடி யாது எனத் தெரிவித்தது.
இதனை த் தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்து 236 பணத்தை எடுத்துக் கொண்டு தாமோதரன் மீண்டும் வங்கிக்குச் சென்றார். அப்போதும் முதியவரி டம் பணத்தை வாங்க மறுத்த வங்கி அதிகாரிகள், அவரது 19 பவுன் நகையை ஏலம் விட்ட னர். மேலும், ஏலம் விட் டதில் கிடைத்த மீதித் தொகையை தாமோதரனின் மகன் நாராய ணன் என்பவர் அதே வங்கியில் வைத்திருந்த ‘ஓவர் டிராப்ட்’ கணக்கில் வரவு வைத்தனர்.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு தாமோதரனின் மகன் நாராயணனது ‘ஓவர் டிராப்ட்’ கணக்கில் அவரது அனு மதியின்றியே ரூ.4 லட் சத்தை வங்கி நிர்வாகம் கூடுதலாக வரவு வைத்து அதிக வட்டி வசூலித்த தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து நாராயணன் மதுரை கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வங்கி நிர்வாகத்தின் இந்த அலைக்கழிப்பால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தாமோதரன், நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆணையத்தின் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையில், வாடிக்கையாளர் கடனை அடைக்க முன் வந்தும் அதனை ஏற்க மறுத்து நகையை ஏலம் விட்டதில் வங்கியின் சேவை குறைபாடு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதியவருக்கு மன உளைச்சல் மற்றும் ஏற்பட்ட சிரமங்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், இந்தத் தொகையை 45 நாட்களுக்குள் வழங்கத் தவ றினால் 9 சதவீத வட்டி யுடன் சேர்த்து அளிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.