சங்கரன்கோவில்: போதையில் பஞ்சாயத்து ஊழியர் அடித்துக் கொலை
1 min read
Sankarankovil: Panchayat employee beaten to death while intoxicated
25/6/2026
தென்காசி மாவட் ம் சங்கரன்கோவிலை அடுத்த சின்னக்கோவிலான்குளம் அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியசாமி (வயது 52). இவர் தெற்கு சங்கரன்கோவில் பஞ்சாயத்தில் தண்ணீர் திறந்து விடும் வேலை பார்த்து வந்தார். இவர் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் குடும்பத்தை பிரிந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதே ஊரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கணேசன் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம்தேதி பாக்கியசாமி ஊரில் வைத்து மது குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். அப்போது கணேசன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவரும் மது குடித்து இருந்த நிலையில், பாக்கியசாமி திடீரென கணேசனை பார்த்து திட் டியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாக்கியசாமி கல்லை வீசி கணேசனை தாக்கி யுள்ளார். இதையடுத்து கணேசன் கம்பால் பாக் கியசாமியை தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சரிந்து விழுந் தார்.
இதை பார்த்தவர்கள் சின்னக்கோவிலான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ் பெக்டர் பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பாக் கியசாமியை மீட்டு சிகிச் சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணே சன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
இதனிடையே பாக் கியசாமி சங்கரன்கோவி லில் இருந்து மேல் சிகிச் சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து கணேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.