2 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
1 min read
Sexual harassment of two children: Young man sentenced to 7 years in prison.
25.6.2026
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு தூத்துக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய 2 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த மங்கேஷ்குமார் (வயது 26) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா நேற்று (24.6.2026) மேற்சொன்ன மங்கேஷ்குமாரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.